Fathima Naleera. Powered by Blogger.

Sunday, March 4, 2012

சர்வதேச மகளிர் தினமும் இன்றைய புதுமைப் பெண்களும்..பாத்திமா நளீரா


மனித வாழ்வில் இரண்டு சோகங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று நாம் ஆசைப்படுவது கிடைக்காமல் போவது. மற்றையது நாம் ஆசைப்படுவது கிடைத்து விடுவது - பெர்னாட்ஷா
மார்ச்  
ஆம் திகதி. இது சர்வதேச மகளிர் தினம். ஆண்டு தோறும் முழு உலகமுமே இத்தினத்தைக் கொண்டாடிருமைப்படுத்துகிறது.பெண்களின் அடிப்படை உரிமைமனித உரிமைஜனநாயக ரீதியிலான உரிமைபொருளாதார உரிமைசமூக அமைப்பு என்று பல வகைகளிலும் ஆணாதிக்கம் மேலோங்கி விசேடமாகவறுமைக்கு உட்பட்ட பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள்அவர்களின் உழைப்பில் இடம்பெற்ற சுரண்டல்கள் இவற்றுக்கெல்லாம் எதிராகக் கிளர்ந்த எழுச்சிப் போராட்டத்தின் வெற்றி நாளாகவே இந்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுஆண்களுக்கு இணையான மதிப்புமரியாதைகெளரவம் வழங்குவது சம்பந்தமான ஒரு தீர்மானத்தை அமெரிக்க சோசலிஷக் கட்சி கொண்டு வந்து அதன்அடிப்படையில்பெப்ரவரி 28 ஆம் திகதி பெண்கள் தினமாக கொண்டாடுவதற்கு அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால், 1910 ஆம் ஆண்டு சோஷலிசத்துக்கான இரண்டாவது சர்வதேச மகாநாடு கோபர்ன்ஹேகனில் நடைபெற்ற போது க்ளேரா செட்டிகன் என்ற தொழிலாளர் தலைவிசமத்துவத்துக்கான பெண்கள் நடத்திய போராட்டத்தை ஞாபகப்படுத்துவதற்குச் சர்வதேச பெண்கள் தினத்தைப் பிரகடனப்படுத்துமாறு கோரினார். அதன் பிறகு மேற்கத்தைய மற்றும் ஐரோப்பிய நாடுகள் 1913 இல் ஒன்று கூடி மார்ச் எட்டாம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவெடுத்தன.
எனவேதொழிலாளர் போராட்டத்துடன் வாக்குரிமைக்கான அரசியல் போராட்டமும் மேலும் ஆண்களுக்கு அடிமைப்பட்டிருந்த பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி பெண்கள் ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதனை எடுத்தியம்புவதற்குமாகவே இந்தச் சர்வதேச பெண்கள் தினத்தை நினைவில் நிறுத்துகிறோம்.
இன்று சமுதாயத்தின் எத்துறையை எடுத்துக் கொண்டாலும் பெண் இல்லாத துறையே இல்லை எனலாம். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட அடிமைகளாக பேச்சுரிமைகல்வி கற்கும் உரிமைவிவாக உரிமைவழிபாட்டுரிமை அற்றவர்களாகவும் சாபத்துக்கு உரியவர்களாகவும் கேவலமான போகப் பொருளாகவும் பெண்கள் சித்திரிக்கப்பட்டனர்..
ஆனால்இன்று ஜனநாயக ரீதியிலான உரிமைகள் முற்போக்குத்தனமான எழுச்சிகள்புரட்சிகரமான தூண்டல்கள்சிந்தனைகள் என சகல வழிகளிலும் சுதந்திரக் காற்றை அனுபவித்தவளாக பெண் முன்னேறி சகல துறைகளிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். மண்ணிலிருந்து விண் வரை சகல துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறாள். பெண்ணின் பெருமை இப்படி ஒரு புறமிருந்தாலும் ---
அன்று தொடக்கம் இந்த நூற்றாண்டின் இன்று வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லைஒழிந்த பாடும் இல்லை. இன்னமும் (பல சந்தர்ப்பங்களில்) முதலாளித்துவம் நுகர்கின்ற பொருளாகத்தான் பெண் இருக்கிறாள். பெண் வர்க்கத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அட்டகாசம்காழ்ப்புணர்வுவக்கிரத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. பெண் எவ்வளவுதான் உழைத்து முன்னேறினாலும் குடும்பத்தில்சமூகத்தில்சமுதாயத்தில் அவளுக்கு மறைமுக இரண்டாம் பட்ச நிலைதான் கிடைக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகளவிலும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. படிக்கின்றபணிபுரிகின்ற பெண்களில் ஐம்பது சத வீதமானவர்களுக்கு அத்துமீறல்கள் நடக்கின்றன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.. ஊடகங்களை எடுத்து நோக்கினாலும் நாள் ஒன்றுக்கு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான ஒரு வன்முறைச் சம்பவமேனும் பதிவு செய்யப்படாமல் வெளிவருவதில்லை.
இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல கோணங்களில் வியாபித்திருப்பதனைக் காணலாம். குடும்ப வன்முறைபாலியல் வன்முறைபாலியல் தொல்லைகள்உடல்உள ரீதியிலான துன்புறுத்தல்கள்உணர்வுத் துஷ்பிரயோகம் (Emotional Avuse), எனத் தொடர்ந்து விரிவாக நோக்கினால் சீதனப் பிரச்சினைவறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் பிரச்சினைஅகதிமுகாம் பெண்களின் நிலைமைசிறைச்சாலையில் வாழும் பெண்களின் பிரச்சினைவிதவைகளின் நிலைமையுத்தப் பாதிப்புகளின் விளைவுகள் ஏற்படுத்தும் பிரச்சினை என அடுக்கிக் கொண்டே போகலாம். உலகளாவில் நடத்தப்பட்ட 50 ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூன்றிலொரு பெண் என்ற விகிதத்தில் அவர்கள் உடல்உளபாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மிக மிக அதிகமான அடிப்படைக் காரணம் ஆண்கள் மீது பெண்கள் பொருளாதார ரீதியில் தங்கியிருத்தல்பெண்களின் பொருளாதார சுதந்திரத்துக்கு ஆண்களின் விரோதத் தன்மை மற்றும் வாழ்நாள் முழுவதும் கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கும் இயந்திரமாகவே பெண்கள் கணிக்கப்படுவது என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். எவ்வளவுதான் பெண்கள் மனதளவில் அல்லது வெளிப்படையாக குமுறிக் கோஷம் எழுப்பினாலும் குடும்பமும் சரி சமுதாயமும் சரி பாராதூரமாக அலட்டிக் கொள்ளவதில்லை. நாளுக்கு நாள் பெண்கள் மீதான பிரச்சினைகள் அதிகரிக்கின்றனவே தவிரகுறைந்தபாடில்லை. பாதையில் செல்வது தொடக்கம் பணி புரியும் நிறுவனம் வரை பெண் பாதிக்கப்படாமல் இல்லை. இவற்றுக்குக் காரணம் பெண்கள் உரிமைமரியாதை தொடர்பான தெளிவின்மை ஆண்கள் மத்தியில் நிலவுவதுடன் தமது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் சகல வழிகளிலும் பிரயோகிக்க முற்படுவதால் தன்னிலை மறக்கும் நிலை ஏற்படுகிறது. பெண் சம்பந்தமான பக்கங்களிலும் இவர்களுக்கு ஒரு மயக்க நிலை உள்ளது.
இவ்வாறு பெண்களின் உரிமை விடயத்தில் தேடல்கள் தொடர்கின்ற அதே நேரம்- மேற்கத்தைய நாகரீக மோகத்தில் விழுந்து அல்லல்படும் இன்றைய எமது பெண்களின் நிலைமையை எடுத்துப் பார்த்ததால் ----
இன்றைய பெண்ணிலைவாதிகளின் உரிமையில் அளவுக்கு மீறிய புரட்சியின் எழுச்சியில் யதார்த்தமற்ற தன்மையே மிகையாகக் காணப்படுகிறது. நாம் கண்கூடாகப் பார்க்கின்ற பல விடயங்களை எடுத்து நோக்கினால் மகளிர் உரிமைகள்சுதந்திரம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு கட்டுப்பாடுபண்பாட்டை இழந்துநாகரீகத்தின் விளைவால் பலவிதமான அனாச்சாரங்களுக்கு பாதை அமைக்கப்படுகிறது.
ஆணும் பெண்ணும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு ஒன்று கலந்த உரிமைகள்வென்றெடுக்கப்படுகின்றன. பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழ (ஒருபால் திருமணம்) ஒரு போராட்டம்விபசாரத்துக்குச் சட்ட அங்கீகாரம் தேவை என இன்னொரு கூக்குரல் (ஏற்கனவே சில நாடுகள் அங்கீகரித்துள்ளன) நினைத்த நேரத்தில் கற்பை ஏலம் விடுவதற்கு ஜனநாயக ரீதியிலான உரிமை என்ற பேரில் போராட்டம்மணம் முடித்தாலும் முடிக்காவிட்டாலம் சேர்ந்து வாழவும் பிரிந்து வாழவும் ஒரே சமயத்தில் பல கணவன்களை சேருவதும் மாற்றுவதுமான ஒரு புரட்சிகரம் மேலும் பொருளாதார (பணம்) கவர்ச்சியின் விளைவாக ஊடக விளம்பரத்துறையை எடுத்துக் கொண்டால் எந்த விளம்பரம் என்றாலும் பெண் இல்லாத விளம்பரம் இல்லை எனலாம்.
ஒரு வாகன விளம்பரம் என்றாலும் கூட பெண்ணின் அங்க அசைவுஒட்டி உரசி கவர்ச்சிகரமான (போஸ்) முறையில் இருந்தால்தான் வாகனத்துக்கே ஓர் உத்வேகம் வருகிறது.. மேலும் தொலைக்காட்சிசினிமாபொருளாதார ரீதியில் கவர்ந்து கொள்ளும் வகையில் தகவல் மற்றும் தொடர்பாடல்தொழில்நுட்பம் தொடர்பான இன்டர்நெட்கையடக்கத் தொலைபேசி போன்ற விடயங்களில் வழுக்கி விழுந்த பெண்களின் சிந்தனைநடைமுறை வாழ்வுஎழுச்சியும் புரட்சியுமிக்கதா?
ஆண்கள்தான் சேற்றைக் கண்டால் மிதிப்பார்கள். தண்ணீரைக் கண்டால் கழுவி விடுவார்கள்.. ஆனால்பெண் பூஜிக்கப்பட வேண்டியவள்.. கையெடுத்துக் கும்பிடுமளவுக்குப் பெண் இருக்க வேண்டும். கையைப் பிடித்து இழுக்கின்ற அளவுக்கு அவளது உடைநடை பாவனை (வாழ்க்கை முறை) இருக்கக் கூடாது.
பெண் சார்பாக பல சாதகமான விடயங்கள் இருப்பதனால் அவற்றை இவள் தான்தோன்றித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதனையும் மற்றும் இவளின் செயற்பாடுகள்நடத்தைகள்சமூக விரோத செயல்களைவன்முறைகளைத் தூண்டுவதாக அமையக் கூடாது. பெண் என்பவள் குடும்பத்தையும் சுற்றாடலையும் சீரழிக்கக் கூடிய ஒரு நாசகாரச் சக்தியாக இருக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு சுய கட்டுப்பாட்டை அவளே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கமான இலட்சியம் வேண்டும். குடும்பத்தின்சமூகத்தின்நாட்டின் கட்டுக்கோப்புக்கு அச்சாணியாக இருப்பவள் பெண்தான். அனைத்து மதங்களும் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையுமே போதிக்கின்றன. சுதந்திரம்உரிமைபுரட்சி என்று தான் தோன்றித்தனமாக நடப்பதனை விட்டு விட்டு நல் வழிகாட்டல்களைப் பின்பற்றி நடத்தல் மிக மிக அவசியம். உரிமை கேட்கும் விடயம் என்றாலும் அதற்குப் பொறுப்பணர்வு தேவை. நாளைய எமது சந்ததிகள் எம்மை மதிப்பதாக அமைய வேண்டும்.
எனது அறியாமையைத் தவிர வேறு ஒன்றினையும் நான் அறிந்திருக்கவில்லை  சோக்கிரடீஸ்


(எதிர்வரும் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம்)
நன்றி வீரகேசரி வாரவெளியீடு: 04-03-20110 comments:

Post a Comment