Fathima Naleera. Powered by Blogger.

Sunday, May 9, 2010

அன்னையே..உன்னையே.. - பாத்திமா நளீரா


உன்
நிஜமான சுகத்தை
மறந்து-எங்கள்
நிழலைக் கூட
பாதுகாத்த- என்னை
ஈன்ற தாயே
உனக்கு…
ஈடாக-எந்த
பொக்கிஷமும்
இவ்வையகத்தில் இல்லை

கருவறையில்-என்னை
பத்துத் திங்கள்
பத்திரமாக
காவலில் வைத்தாயா?
இல்லை.. இல்லை..
கருவறைக்கு-நீ
காவல் புரிந்தாயா?



பரிவுமிகுந்த- உன்
பாசத்தின் முன்னால்
சூரியன் கூட
பனிக் கட்டிதான்-உன்
மனம் நொந்தால்
மாளிகை கூட
மண்ணறை ஆகிவிடும்.
உன்பாதத்தின் கீழ்
சுவனத்தை
வைத்துக்கொண்டு- நீ
எங்களுக்காக
நகர வேதனையை
அனுபவித்தாயே-உன்
கண் கலங்கினால் கூட
இத்தரணி
தடம் புரண்டுவிடும்.

சௌந்தரிய தேவதையே- உன்
தியாகத்தின் முன்னால்
கோபுரம் கூட
பூஜ்யமாகி
இமயம் கூட
சிரம் தாழ்த்தும்.

பரிவு தேசத்தின்தாயே
பவித்திரமான-உன்
அன்பும் ஆறுதலும்
அரவணைப்பும்-எங்கள்
கண்களை மட்டுமல்ல..
இப்புவியைக் கூட
குளிர்ச்சியாக்குகிறது.

அன்னையர் தினத்துக்கு
வருடத்தில் ஒருநாள்
மகுடம் சூட்டலாம்- ஆனால்
எங்களைகாலமெல்லாம்
மடியிலும் மார்பிலும் தாங்கிய
உன்னைதினம் தோறும்
இதயத்தில் வைத்து
அன்பால்…அஞ்சலி செய்கிறேன்

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 09-05-2010

0 comments:

Post a Comment