Fathima Naleera. Powered by Blogger.

Monday, June 28, 2010

பெற்றோர், பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் - பாத்திமா நளீரா


சமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றினதும் கெட்டவற்றினதும் ஊற்றாகவே இது அமைகிறது

ஒரு காலத்தில் அழகான பூஞ்சோலை போல் குடும்ப சுற்றுவட்டார வாழ்க்கை முறை அமைந்திருந்தது. ஆனால், தற்போது தகவல், தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சிக்கேற்ற விதமான ஒரு வேகமான வாழ்க்கை முறை. அதிக ஒட்டுறவு இல்லாத அந்நியம், இயந்திரத்தனமான, நடைமுறைக்கு ஒவ்வாத, மத பண்பாடுகளுக்கு உட்படாத நவீனத்துவமான நிழல்களைப் பின்பற்றும் ஒரு போலியான வாழ்க்கை முறையாகவுள்ளது.

பெற்றோர், பிள்ளைகளுக்கிடையேயுள்ள அன்பு, நட்பு, இறுக்கம், எண்ணங்களின் பரிமாற்றம் அனைத்திலும் அதிக இடைவெளி ஏற்பட்டுள்ளது. உறவு முறைகளெல்லாம் இன்று குயளவ குழழன உணவு வகை போன்று மாறிவிட்டன. இந்த இருபாலாருக்குமிடையிலான உறவுமுறைகள் கூட ஏதோ ஒரு வகைப் பிரச்சினையிலும் டென்சனிலுமே சுழன்று வருகின்றன. புரிந்துணர்வு என்பது மிக மிக அரிதாகச் சுருங்கிக் கொண்டு வருகிறது.

ஒவ்வொரு நல்ல எண்ணங்களும் நல்ல காரியமுமே குடும்பம் என்ற தடாகத்தில் நிம்மதி, மகிழ்ச்சி என்ற அழகிய பூக்கள் மலர ஏதுவாக அமைந்து விடுகின்றன. ஆனால,; இன்று நடப்பது என்ன? தொட்டால் சிணுங்கி மாதிரி ஒரே பிரச்சினை, புரிந்துணர்வின்மை, குழப்பம். பெற்றோர் (தாய்,தந்தை) இவர்களுக்கிடையே ஓயாத பிரச்சினை. மறு பக்கத்தில் பெற்றோர், பிள்ளைகளுக்கிடையே பிரச்சினை.

பிள்ளைகளுக்குப் பொருள் தேடி வைப்பதனை விட, நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதே பெற்றோர் தேடி வைக்கும் உண்மையான செல்வம். ஆனால், நடைமுறையில் எத்தனை சதவீதம் இவை சாத்தியமாகின்றனவோ தெரியவில்லை.

பெரும்பாலும் ஒரு குழந்தையின் ஐந்து வயது வரை அந்தப் பிள்ளையின் ஒவ்வொரு அசைவிலும் நடை, உடை பாவனையிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் பெற்றோர்களே. உண்ணும் உணவு முதல் பேசும் மொழி வரை அவர்களே தீர்மானிக்கின்றனர். அதன் பின்னர்தான சூழலின் சாதகம், பாதகம் அந்தப் பிள்ளைக்கு ஏற்படுகிறது. ஆகவே, பிள்ளைப் பருவத்தின் ஆரம்ப கால நடவடிக்கை முதல் கொண்டே பிறரை விட அதிக ஆதிக்கம் செலுத்தும் பெற்றோர். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும் அடித்தளமிடுகின்றனர். ஒரு பிள்ளையின் நிறை, குறைகள் அனைத்தும் பெற்றோரையே சென்றடைகின்றன. வளர்ச்சியடைந்த பிள்ளளையின் (வளர்ந்தவர்) குற்றம், குறைகள் கூட சமுதாய மரபு வழியாக பெற்றோரையே (அப்பாவிகளைக் கூட) அதிகம் சென்று தாக்குகின்றன.

தவறிழைக்கும் பிள்ளைகளையும் தம்மை விட்டு விலகிச் செல்லும் பிள்ளைகளையும் அரவணைத்து, அன்பு செலுத்தி பல அறிவுரைகளை எடுத்தியம்பி பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெற்றோர்களைப் பிள்ளைகள் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள்.தாம் விடும் பிழைகளை தவறுகளை உணர்த்தும் பெற்றோரையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிப் பார்க்கும் கலியுக காலம் இது.

பெற்றோரின் கண்ணியத்தைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள் பிள்ளைகள். பல கஷ்டத்தின் மத்தியிலும்; தம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை தமது சுயநலத் தேவைகளுக்காக விட்டு விலகுவதும் அர்த்தமற்ற காரணங்களைக் கூறிப் பெற்றவர்கள் மீதும் சமுதாயத்தின் மீதும் பழி சுமத்துவதும் சுற்றுச் சூழல், அயலவர்களின் அனுதாபங்களைப் பெறுவதற்காக அப்பாவிகள் போல் நடிப்பதும் இன்று நாளாந்தம் பெருகிக் கொண்டே வருகின்றன.

அனைத்து விடயங்களிலும் தனிமனித சுதந்திரத்தை இன்றைய பிள்ளைகள் எதிர்பார்க்கின்றனர். தமது எந்த விடயத்திலும் பெற்றோர் தலையிடக் கூடாதென்று பிடிவாதம் பிடிக்கின்றனர். பெரும்பாலும் அந்தப் பிள்ளைகளின் உடைகள் கூட பெற்றோரின் சொல்லுக்கு அடங்காமல் திமிராகவிருக்கும். முடி அலங்காரம் கூட அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது,

இன்று ஒரு பிள்ளைக்கு புத்திமதி (உபதேசம்) கூறுவது போன்ற ஒரு கஷ்டமான காரியம் வேறு ஒன்றுமில்லை. அந்தப் புத்திமதிகளை ஏதோவொரு நாசகார சக்தியாகவே பிள்ளைகள் பார்க்கின்றனர். அதேநேரம, தமது பிள்ளைகளுக்கு ஒரு விடயத்தைச் சொல்லும் முன்னர்; இரு தடவைகள் யோசிக்க வேண்டியுள்ளது. மூன்றாவது தடவையாக அது கேள்வி கேட்க ஆரம்பித்து விடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதே நேரம் எடுத்ததற்கெல்லாம் உபதேசம் செய்து கொண்டிருப்பதும் பெற்றோர்-பிள்ளைகள் உறவில் விரிசலையும் ஏற்படுத்தலாம்.

அடுத்ததாக, கல்வி விடயத்தை எடுத்துக் கொண்டாலுமோ அல்லது பிள்ளையிடம் காணப்படும் தனித்துவமான, திறமையான விடயங்களை எடுத்துக் கொண்டாலுமோ மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கதைப்பதே இன்றைய பெற்றோர் விடும் பெரும் தவறு. பிள்ளைகளின் மனதுக்கு இதமாகவும் அவர்களின் அறிவுக்கு எட்டிய வகையிலும் உள்ள ஆற்றலுக்கு உறுதுணையாக இருப்பதனை விட்டு விட்டு தமது பிள்ளைகளைத் தாமே தாழ்த்திக் கதைப்பதோடு பிறரோடு சமப்படுத்தி அவர்களின் திறனைக் குறைத்துப் பேசி தமது பிள்ளைகள் விலகி நிற்க தாமே வழி சமைக்கின்றனர்.

அவர்களை ஊக்குவிப்பதனை விடுத்து, சதா குறை கண்டு பிடித்துக் கொண்டே அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்கின்றனர்.
பணம், உழைப்பு, தொழில் என்று நாள் முழுவதும் நேரத்தைச் செலவிடும் பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளின் தேவைக்காகத்தான் என்று கூறிக்கொண்டு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள். அன்பு, அரவணைப்புக்காக ஏங்கும் இந்தப் பிள்ளைப் பருவத்தினருக்கான இடம் பெற்றோரிடம் வெறுமையாகவிருப்பதனால் அதனை ஈடு செய்ய வேறு உறவு முறைகளையும் வேறு வழிமுறைகளையும் நாடப் போய் சேற்றில் கால் புதைந்த கதையாகி விடுகிறார்கள். இதனால் மத, கலாசார, பண்பாட்டுச் சீரழிவுகளே அதிகம் ஏற்படுகின்றன. இதற்குக் காரணமே பெற்றோர்கள்தான். பிள்ளைகளுடன் அமர்ந்து உணவருந்த, பயணம் செல்லக் கூட நேரமிருக்காது. விடுமுறை காலங்களில் சுற்றுலா என்ற ஒன்று இவா’களின் வாழ்க்கையில் இருக்காது. அவசரமான பேச்சுவார்த்தையுடன் பணக் கொடுக்கல் வாங்கலுடன் மட்டும் அந்தப் பெற்றோர் உறவு முறை நின்று விடுகிறது

தனிமை, வயது, கூடாதநட்பு, தேவையற்ற உறவுகள், அநாகரிகமான பழக்க வழக்கங்கள் பிள்ளைகளைச் சீரழிக்கின்றன. எல்லாவற்றும் என் இஷ்டம், என் சுதந்திரம் என்ற பிள்ளiயின் பிடி வாதத்துக்கு விதை தூவியவர்களும் பெற்றோர்களே. எதற்காகப் பணம் சேர்க்கிறார்களோ அது அர்த்தமற்றதாகி விடுகிறது.

மற்றுமொரு முக்கிய காரணி, பெற்றோரின் சண்டை, சச்சரவுகள் பிள்ளைகளின் மனதை அதிகம் பாதிக்கிறது. இவர்களின் பிரச்சினை நான்கு சுவரைத் தாண்டும் போது அயலவர்கள் முன்னால் கூனிக்குறுகும் நிலை இந்தப் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. மற்றும் தமது கோபதாபத்தை பிள்ளையின் பக்கம் திசை திருப்புவது, திடீத் திடீரென இருவரும் பிரிவதும் சேர்வதும் பிள்ளைகளின் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணியாக அமைகின்றன. மேலும் வேலைக்குச் செல்லும் பெற்றோரின் அழுப்பு, வேலைத்தளத்தில்; ஏற்படும் பிரச்சினைகள், கசப்பான அனுபவங்கள் இவற்றுக்கெல்லாம் பிள்ளைகளே பலியாகி விடுகின்றனா. இவர்களின் இந்த நடவடிக்கையால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதோடு அந்நியப்பட்டு, தனிமைப்பட்டு வெறுமையான மனதோடு வெறித்தனமான செயலுக்கும் கையூன்ற ஆரம்பிக்கின்றனர்.

ஆகவே, பெற்றோர்h பிள்ளைகளுக்கிடையிலான வாழ்க்கை முறையென்பது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பாகிவிட்டது. பெற்றோர், பிள்ளை என்று எந்தப் பக்கத்திலேனும் தவறிழைக்கப்பட்டாலும் எதிர்காலம் பாதாளம்தான் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 27-06-2010

0 comments:

Post a Comment