Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, June 1, 2011

உன் சிரிப்புக்கு நான் அடிமை -பாத்திமா நளீரா


மணியே...!
மாதுளம் முத்துக்கள்
உதிக்காத-உன்
சிரிப்பின்
நுழைவாயிலில்
நிலவு ஒளிந்துள்ளதா?
--------
உனக்காக- ஒரு
புதிய
அகராதியை ஆராதனை
செய்யப் போகிறேன்.
பரிமளம் தவழும்- உன்
பனி பூத்த
பொக்கை வாய்க்கு- எந்த
பொக்கிஷத்தால்
அலங்கரிக்கப் போகிறேன்?
-----------
அஞ்சுகமே!
அமுதூறும்- உன்
குமிழ்ச் சிரிப்பின்
குளிர்மைக்கு
மந்த மாருதம் கூட
மயங்கி விடாதா?
----------
சுடரும் சுடரே!
ஜொலிக்கும்
தங்கம் கூட- உன்
யௌவனத்தின் முன்னால்
மதிப்பற்றதாகி
மங்கி விடாதா?
---------
சிரம் தாழ்த்தாத
சிகரங்கள் கூட- உன்
சிருங்கார சிரிப்பில்
சிறைபட்டு விடுமே!
-----------
துயரங்களால் இதயங்கள்
துண்டாடப்படும் போது
கொள்ளையடிக்கும்
வெள்ளைச் சிரிப்பால்
புதிய இதயமே
பூங்கா அமைக்கும்.
----------
உன்னை
உச்சி முகர்ந்து
முத்தமிட்டாலே
கவலைகள் எல்லாம்
கரைந்து கானகம்
ஓடி விடாதா?
சோர்ந்த உள்ளங்களுக்கு
நீயே
நிஜமான வைத்தியன்.

2 comments:

  1. அருமையான கவிதை படுக்கும் போதே கவலைகள் மறந்து மனம் மகிழ்கின்றது , வாழ்த்துகள்

    குழந்தைக்கு(முகத்தில் பல இடங்களில்)முத்தம் கொடுத்துப் பாருங்கள்.
    ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.மேற்கண்ட நபிமொழி குழந்தைகளை, சிறுவர்களை முத்தமிட வேண்டும் என்றும், முத்தம் இடுவது அன்பின் வெளிப்பாடு என்றும், முத்தம் இடாதவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்றும் தெளிவாகிறது.
    http://nidurseasons.blogspot.com/2011/07/blog-post_20.html

    ReplyDelete
  2. You can see your site பாத்திமா நளீரா Link in http://seasonsali.com/ (LINK 5(Tamil))

    ReplyDelete