Fathima Naleera. Powered by Blogger.

Sunday, November 2, 2014

தீக்குச்சி















கண்கள் கரையேறி
இருட்டில் கைதாக
என் உருவம் இருந்தது..
ஆனால்
அழகியமுகம்
தொலைந்தது
…….
படையெடுத்த
பணம்
திருமணத்தை
கைப்பற்றிக்கொள்ள
இரு மனங்களும்




வெவ்வேறு மூலையில்..
இல்லறம்
இறந்துகொண்டிருந்தது
திருமணம் ..என்ற
தீக்குச்சியால்..எத்தனை
மலர்கள்
மரணிக்கின்றனவோ?

………

பூக்களைவெட்ட
கோடரியை…
எடுக்கிறார்களே
ஆயுத கலாசாரம்
இல்லறத்திலும்
உள்ளதோ?
புரட்சிசெய்ய
முடியாத
எண்ணங்கள்
குப்புறப்படுத்து
நீதியைத்தேடின.
……..
என்..
பாதிக்கனவில்
பாரதி வந்து
பெண் விடுதலை
பேசிவிட்டுப்போனார்
மீதிகனவில்
மண்ணறையின்
வடிவத்துக்கு..
சுதந்திரம் கிடைத்தது
……..




முடமாகிப்போன
உடலுக்கு
கால்கள் தேவையில்லை
ஊமையாகிப்போன
காயங்களுக்கு..என்
கவிதையின்..முத்தம்
ஒன்றே….மருந்தாகும்!

- பாத்திமா நளீரா

0 comments:

Post a Comment