Fathima Naleera. Powered by Blogger.

Saturday, November 8, 2014

நெருப்பு ஊர்வலத்தில்.. -பாத்திமா நளீரா

வெடித்த நினைவுகளில்
கனத்த காட்சிகள்
படர….என்
கவிதைக்கு….
எல்லாம் இருந்தது
கனவைத் தவிர!
----------------------------
தீண்டத்தகாத
இதயம்
தட்டப்படாத தூசியில்
கண்ணீர் ஓவியமாக
நிலத்தை
முத்தமிட்டன.
சிந்தித்து.. சிந்தித்து
மூளையும் சிலந்தி
வலை  பின்ன
----------------------------

நெருப்பு ஊர்வலத்தில் – என்
காகிதப் பூக்கள்- நீ
வீசியெறிந்த
வார்த்தைகளிலிருந்து
இன்னமும்தேள்களைப்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்!
----------------------------
நீ மாத்திரம்
பிரபஞ்சத்தில்
பறந்து கொண்டிருக்க
என்னை- உன்
எண்ணங்களின்
நுனியில்
தொங்க விட்டாயே!
மண்ணில்
நீந்திக் கொண்டே
கடலிடம்
கோபித்து என்ன பயன்?
----------------------------
புதையலாக
தோண்டி எடுத்த

காதலில்….
இவ்வளவு
கறையான்களா?
என்
வாழ்க்கையின் வாசம்
இப்படி
வாடகைத் தாய் போல்
ஆகிவிட்டதே
எப்படித்தான்-என்
அன்பைக் கொல்லும்
மருந்தைக்
கண்டு பிடித்தாயோ?
----------------------------

என்
விழிகளைத்
தேடித் தேடி
விஷத்தை
கொட்டி விட்டாயே
என்றாலும்  உன்
சுவடுகளின்
பதிப்பில்
சுவர்க்கம்

சுமக்கிறேன்!
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 09-11-2014

0 comments:

Post a Comment