Fathima Naleera. Powered by Blogger.

Sunday, December 23, 2012

முடிவில் முகத்தைத் தேடினேன்.... பாத்திமா நளீரா


பூக்களின் பனியுடன்
எண்ணங்களின்
குளிர்ச்சியையும்
தூது விட்டேன்
ஆனால்...
சாம்பல் தூவி
வரவேற்ற – ஒரே
பெண் நீதான்.
++++++


கனவுகளின் தொகுப்பை
கண்களின் விலாசத்துக்கு
அனுப்பினேன்.
திரும்பி வந்தது – என்
வெள்ளைத் தாள்கள்
மட்டும்...
++++++
உள்ளத்தில்
ஊறிய ஒற்றை
சந்தோஷத்தை
ஊஞ்சலிட்டு
உயரே பறந்தேன்
நீ...
கயிற்றில்
நெருப்பு வைத்தது
தெரியாமல்..
++++++
அஸ்தமனத்தில்
விடிவெள்ளியை
தேடும் – என்
தேடலுக்கு
இதயத்தை
இடுகாட்டில் புதைத்தது
மறந்து விட்டது.
உன்
இளமையின் வேள்வி
இன்னும் எத்தனை
இமைகளுக்கு – தீ
வைக்கப் போகிறதோ?
++++++
நல்ல வேளை
விழிகளுக்குள் – நான்
தாஜ்மஹாலைக்
கட்டவில்லை.
உலகின்
அதிசயமாவது
கௌரவமாக வாழட்டும்.
++++++
இந்த நூற்றாண்டில்
முகம் தொலைந்த
கவிதையிலிருந்து – என்
முகவரியைத் தேடினேன்
கண்ணீர்தான்
கண்களைக்
கரையேற்றியது...
++++++
புரிந்தது...
வாழ்க்கையின்
ஓட்டத்துக்கு...
முட்செடியை
அல்லவா பிடித்துள்ளேன்..
முடிவில் – என்
முகத்தையும்
தேடிக் கொண்டிருக்கிறேன்..

வீரகேசரி வாரவெளியீடு 23-12-2012

3 comments:

  1. அருமையாக உள்ளது

    //நல்ல வேளை
    விழிகளுக்குள் – நான்
    தாஜ்மஹாலைக்
    கட்டவில்லை.
    உலகின்
    அதிசயமாவது
    கௌரவமாக வாழட்டும்.//

    ReplyDelete
  2. //அஸ்தமனத்தில்
    விடிவெள்ளியை
    தேடும் – என்
    தேடலுக்கு
    இதயத்தை
    இடுகாட்டில் புதைத்தது
    மறந்து விட்டது.
    உன்
    இளமையின் வேள்வி
    இன்னும் எத்தனை
    இமைகளுக்கு – தீ
    வைக்கப் போகிறதோ?//

    ReplyDelete
  3. என் தளத்தில் இன்று:முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?
    tvpmuslim.blogspot.com

    ReplyDelete